அஜித் குழுவின் முதலிடத்தை தட்டிப்பறித்த ஆஸ்திரேலியா
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஆளில்லா வானூர்தி போட்டியில் அஜித் ஆலோசகராக உள்ள தக்சா குழு இரண்டாம் இடத்தை பிடித்தது என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.
ஆனால் உண்மையில் அஜித் ஆலோசகராக உள்ள தக்சா குழு முதலிடத்தை பிடித்ததாகவும், ஆனால் நிறவெறி காரணமாக ஆஸ்திரேலிய நடுவர்கள் இந்த குழுவிற்கு வேண்டுமென்றே மதிப்பெண்களை குறைத்து இரண்டாமிடத்திற்கு தள்ளியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட இலக்கிற்கு சென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் ரத்தமாதிரியை எடுத்து வரவேண்டும் என்று வைக்கப்பட்ட போட்டியில் தக்சா குழுவிற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் குழுவிற்கும் இடையே கடும்போட்டி நடந்தது. இந்த போட்டியில் தக்சா குழு 91 புள்ளிகளுடன் முதலிடத்தையும் மோனாஷ் குழு 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
ஆனால் நேர்முகத்தேர்வு மற்றும் ஆய்வறிக்கையில் தக்சா குழு சிறப்பாக செயல்பட்டிருந்தும் அந்த குழுவிற்கு நடுவர்கள் வேண்டுமென்றே மதிப்பெண்களை குறைத்து அளித்ததால் இறுதியில் மோனாஷ் குழு 0.85 மதிப்பெண் வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்தது. தக்சா குழு இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டது.
அமெரிக்கா உள்பட வல்லரசு நாடுகள் கூட இந்த போட்டியில் பின் தங்கியிருந்த நிலையில் அஜித்தின் குழு முதலிடத்தை பிடித்திருந்தும் நிறவெறியால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இருப்பினும் இந்த குழுவால் இந்தியாவிற்கே பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments