அஜித்தின் 'ஆழ்வார்' பட நடிகை கர்ப்பம்.. ரசிகர்கள் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘ஆழ்வார்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகை தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அஜித் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘ஆழ்வார்’ என்ற திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து இருந்தவர் ஸ்வேதா பண்டேகர். ஆழ்வார் படத்தை அடுத்து ’வள்ளுவன் வாசுகி’ ‘பூவா தலையா’, ‘நான் தான் பாலா’, ‘பூலோகம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.
திரை உலகில் மட்டும் இன்றி சின்னத்திரையில் இவர் பல தொடர்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ’மகள்’ மற்றும் ’சந்திரலேகா’ ஆகிய தொடர்கள் இவரது நடிப்பில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஸ்வேதா பண்டேகர் சன் மியூசிக் தொகுப்பாளர் மால் மருகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com