அஜித்தின் 'ஆழ்வார்' பட நடிகை கர்ப்பம்.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Thursday,May 18 2023]

அஜித் நடித்த ‘ஆழ்வார்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகை தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘ஆழ்வார்’ என்ற திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து இருந்தவர் ஸ்வேதா பண்டேகர். ஆழ்வார் படத்தை அடுத்து ’வள்ளுவன் வாசுகி’ ‘பூவா தலையா’, ‘நான் தான் பாலா’, ‘பூலோகம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

திரை உலகில் மட்டும் இன்றி சின்னத்திரையில் இவர் பல தொடர்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ’மகள்’ மற்றும் ’சந்திரலேகா’ ஆகிய தொடர்கள் இவரது நடிப்பில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஸ்வேதா பண்டேகர் சன் மியூசிக் தொகுப்பாளர் மால் மருகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'மிஷன் இம்பாஸிபிள் 7' டிரைலர்.. இரண்டரை நிமிட  ஆக்சன் விருந்து..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த 'மிஷன் இம்பாசிபிள்' திரைப்படம் ஏற்கனவே ஆறு பாகங்கள் வெளியான நிலையில் தற்போது ஏழாம் பாகம் உருவாகியுள்ளது என்பதும்,  இந்த படம் ஜூன் 12-ம் தேதி உலகம் முழுவதும்

'புஷ்பா' ராஷ்மிகா மந்தனா குறித்த சர்ச்சை கருத்து: ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்..!

'புஷ்பா' திரைப்படத்தில் ஸ்ரீ வள்ளி கேரக்டரில் நடித்திருந்தால் ராஷ்மிகா மந்தனாவை விட அந்த கேரக்டரில் நான் நடித்திருந்தால் நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிவகுத்த பாலிவுட் நடிகைகள்… ஸ்டன்னிங் புகைப்படங்கள்!

சர்வதேசத் திரைப்பட விழாவான 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன்.. நயன்தாராவும் சென்றுள்ளாரா?

கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

சரத்குமார் - அசோக்செல்வனின் 'போர் தொழில்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இளம் ஹீரோ அசோக் செல்வனுடன் சரத்குமார் நடித்து வந்த 'போர் தொழில்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்