அஜித்தின் 'ஏகே 63' படத்தின் நாயகி இந்த இருவரில் ஒருவரா? ஆதிக்கின் வேற லெவல் திட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் 63 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படத்தின் நாயகி முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் ’ஏகே 63’ படத்தின் பூஜை எளிமையாக நடந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூர் மற்றும் திஷா பதானி ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இருவரில் ஒருவர் தான் இந்த படத்தின் நாயகியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திஷா பதானி ஏற்கனவே சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ படத்தில் நடித்து வரும் நிலையில் சிம்புவின் ’எஸ்டிஆர் 48’ படத்தில் மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சில நட்சத்திரங்கள் ஆச்சரியத்தக்க வகைகள் இணைவார்கள் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறப்பு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout