அஜித்தின் 'ஏகே 63' படத்தின் நாயகி இந்த இருவரில் ஒருவரா? ஆதிக்கின் வேற லெவல் திட்டம்..!

  • IndiaGlitz, [Thursday,February 15 2024]

அஜித்தின் 63 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படத்தின் நாயகி முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.

அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் ’ஏகே 63’ படத்தின் பூஜை எளிமையாக நடந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூர் மற்றும் திஷா பதானி ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இருவரில் ஒருவர் தான் இந்த படத்தின் நாயகியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திஷா பதானி ஏற்கனவே சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ படத்தில் நடித்து வரும் நிலையில் சிம்புவின் ’எஸ்டிஆர் 48’ படத்தில் மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சில நட்சத்திரங்கள் ஆச்சரியத்தக்க வகைகள் இணைவார்கள் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறப்பு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

என்ன ஜானு இதெல்லாம்.. 'பிகினி' காஸ்ட்யூமில் '96' நடிகை.. வைரல் வீடியோ..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கௌரி கிஷன் தனது சமூக வலைத்தளத்தில் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில்

சிறகடிக்க ஆசை: மீண்டும் முத்து-மீனா சண்டை.. இந்த முறை தவறு மீனாவிடம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக முத்து-மீனா ஆகிய இருவரும் ரொமான்ஸ் செய்து வந்தனர்

காதலர் தின வாழ்த்துக்கள்: ஒரு தந்தை மகனின் காதல் கதை.. 'ராமம் ராகவம்' கிளிம்ப்ஸ் வீடியோ..!

நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்து வரும் 'ராமம் ராகவம்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி

வெற்றிமாறன் அடுத்த படத்தில் கவின், நயன்தாரா? வேற லெவல் தகவல்..!

வெற்றிமாறன் அடுத்த படத்தில் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளதாக வேற லெவலில் ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

அசோக்செல்வன் படம் உள்பட 3 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் அசோக் செல்வன் திரைப்படம்