அஜித்தின் 'ஏகே 63'.. படப்பிடிப்பு தொடங்கும் நாள் முதல் ரிலீஸ் தேதி வரை மாஸ் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. அந்த வகையில் சற்று முன் அஜித் நடிக்க இருக்கும் ’ஏகே 63’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே வெளியான தகவல் படி இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் கடந்த சில மாதங்களாக வராமல் இருந்த நிலையில் அஜித்தின் ’ஏகே 63’ படத்தின் அறிவிப்பு மட்டும் இன்றி, படப்பிடிப்பு தொடங்கும் தகவல் முதல் ரிலீஸ் குறித்த தகவல் வரை அறிவிக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
With Wholesome Humbleness herewith, we Announce the title of AK's Next Movie Called as #GoodBadUgly #AjithKumar @Adhikravi @ThisIsDSP @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl@SureshChandraa @supremesundar#kaloianvodenicharov #Anuvardhan @valentino_suren@Donechannel… pic.twitter.com/EU4qKO5fEO
— Mythri Movie Makers (@MythriOfficial) March 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com