'ஏகே 62' படத்தில் இந்த ரெண்டும் உண்டா? அஜித் ரசிகர்கள் செம குஷி!

  • IndiaGlitz, [Monday,January 23 2023]

அஜித் நடித்த ’வலிமை’ மற்றும் ’துணிவு’ ஆகிய இரண்டு படங்களிலுமே ரொமான்ஸ் காட்சிகள் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளாக இருந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ படத்தில் ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் ஆகிய இரண்டும் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித்தின் நடித்த ’துணிவு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வெற்றி பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுவரை விக்னேஷ் சிவன் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடி படங்களையே இயக்கி வந்த நிலையில் அஜித்தை வைத்து அவர் இயக்கும் 'ஏகே 62’ படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது.

இந்த நிலையில் 'ஏகே 62’ படத்தில் ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் ஆகிய இரண்டும் இருக்கும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிகை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் என்னென்ன அப்டேட்டுகள் வெளிவரும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

More News

அசீம் காண்டம் கேட்டது உண்மையா? ரசிகரின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த ஷெரினா

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒரு வழியாக 105 வது நாளில் நேற்று முடிவுக்கு வந்தது, அசீம் தான் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார், அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசு கிடைத்தது என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்த

பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. 2வது, 3வது இடம் யாருக்கு?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்பாகி வரும் நிலையில் சற்றுமுன் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து தகவல் புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் கசிந்து உள்ளது. 

இந்த சீசனின் இறுதி போட்டியாளர்கள்.. விக்ரமன், ஷிவின், அசீம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறப்போகிறது என்பதும் இன்னும் சில நிமிடங்களில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே.

விஜய் பாணியில் சந்தானம் அடுத்த படம்... அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகரான விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் பிரபல தெலுங்கு தயாரிப்பு

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தில் இணைந்த மலேசிய நடிகர்.. செம போஸ்டர்

விஷால் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்ததாக வெளியான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது மலேசிய நடிகர் ஒருவர்