நள்ளிரவில் சர்ப்ரைஸ் ஆக வந்த 'ஏகே 62' டைட்டில்.. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Monday,May 01 2023]

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நள்ளிரவு 12 மணிக்கு வெளியானதை அடுத்து அஜித் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக உள்ளது.

இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலை லைகா நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் ரசிகர்களின் கொண்டாட்டம் இரட்டிப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் ’விடாமுயற்சி’ என்று அறிவித்துள்ளது. இது குறித்த போஸ்டரையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதை வைரல் ஆக்கி வருகின்றனர். மகிழ்திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் தற்போது வெளிநாட்டு பைக் ஊரில் இருப்பதால் அவர் சென்னை வந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நீண்ட காலமாக அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை காத்திருந்த ரசிகர்களுக்கு இன்றைய அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வெந்து தணிந்தது காடு 2': சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்..!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம்

'லியோ' படத்தில் இணையும் 'விக்ரம்' நடிகர்.. LCU உறுதியாகிறதா?

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்த முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளதை அடுத்த இந்த படம் LCU படம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து

'பொன்னியின் செல்வன் 2' இரண்டு நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன் 2'  திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

தயவுசெய்து இதை மட்டும் செய்யுங்கள்: 'லியோ' இயக்குனருக்கு கேரள விஜய் ரசிகர் கடிதம்..!

கேரளாவை சேர்ந்த தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜ்-க்கு எழுதிய கடிதத்தில் கேரளாவில் விஜய்யுடன் கூடிய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை நடத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிவிட்டது.. அஜித் படம் குறித்த நினைவுகளை பகிர்ந்த சிம்ரன்..!

அஜித் உடன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற தனது நினைவுகளை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்தப் பதிவு தற்போது வைரல்