close
Choose your channels

5வது முறையாக அஜித்துடன் இணையும் 'பொன்னியின் செல்வி': ;'ஏகே 62' அப்டேட்

Thursday, October 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்பதும் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் அஜீத் ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெற்ற த்ரிஷா தற்போது அஜித்துடன் இணையும் தகவல் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி உள்ளனர்.

அஜித்துடன் நடிகை த்ரிஷா ஏற்கனவே ’ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ மற்றும் ’என்னை அறிந்தால்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஐந்தாவது முறையாக அஜித்துடன் த்ரிஷா இணைய உள்ளதாக குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment