அஜித்தின் 'ஏகே 61' படத்தின் டைட்டில் இதுவா? 46 ஆண்டுக்கு முன் வெளியான படத்தின் டைட்டில்!

  • IndiaGlitz, [Monday,September 19 2022]

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஏகே 61’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பாங்காக் செல்ல உள்ளனர் என்றும் பாங்காக் படப்பிடிப்புடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அனேகமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘துணிவே துணை’ என்று தகவல்கள் கசிந்துள்ளது. இதே டைட்டிலில் கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கடந்த 1976 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்த திரைப்படம் ஒன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாங்காக் படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜித் டப்பிங் பணியில் ஈடுபடுவார் என்றும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து அஜித் ’ஏகே 61’ படம் குறித்த அப்டேட்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

More News

அடுத்த படத்திற்கு தயாராகிவிட்ட லெஜண்ட் சரவணன்: செம யூத் புகைப்படம்!

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.

சிம்பு, தனுஷ் படங்கள் உள்பட டிசம்பரில் வெளியாகும் 4 மாஸ் படங்கள்: ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

சிம்பு, தனுஷ் படங்கள் உள்பட டிசம்பரில் 4 மாஸ் படங்கள் வெளியாக உள்ளதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் செம அப்டேட் கொடுத்த உதயநிதி!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி

செப்டம்பர் 23ல் வெளியாகும் 7 திரைப்படங்கள்: முழு விபரங்கள்!

ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி 7 திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

3 நாட்களுக்கு பின்னரே திரைப்பட விமர்சனம்: தயாரிப்பாளர் சங்க தீர்மானம் சாத்தியமாகுமா?

நேற்று தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் மூன்று நாட்களுக்கு பின்னர் தான் திரைப்பட விமர்சனம் வெளியிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.