அஜித்தின் 'ஏகே 61' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் எப்போது? மாஸ் தகவல்

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஏகே 61'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக் நகரில் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்புக்காக படக்குழுவினர் பாங்காக் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள இன்று அல்லது நாளை பாங்காக் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ‘ஏகே 61' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் ’துணிவே துணை’ என்ற வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் இந்த நிலையில் அது உண்மைதானா? என்பதை இன்று மாலை 6 மணிக்கு தெரிந்து கொள்வோம்.