விஜய் சென்ற அதே இடத்திற்கு செல்லும் அஜித்: எந்த இடம் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,August 15 2022]

விஜய் படப்பிடிப்பு நடத்தி விட்டு சென்ற அதே இடத்தில் அஜித் நாளை முதல் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது என்பதும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்த இந்த படப்பிடிப்பில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் திரும்பியுள்ள நிலையில் தற்போது அதே விசாகப்பட்டினத்தில் நாளை முதல் அஜித் நடித்துவரும் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளைய படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் 30 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மொத்தமாக பாக்கி உள்ளது என்றும் இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் டிசம்பரில் இந்த படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளை படப்பிடிப்பில் நாயகி மஞ்சுவாரியரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், மஞ்சுவாரியர் உள்பட பலரது நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்தை எச் வினோத் பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.