அஜித்தின் 'ஏகே 61' கிளைமாக்ஸ் இந்த பள்ளத்தாக்கில் தான்: எச்.வினோத்தின் வேற லெவல் திட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து வரும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அஜீத், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க விசாகப்பட்டினத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு என்ற பகுதியை எச் வினோத் தேர்வு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்த பள்ளத்தாக்கில் வளைவான சாலைகள் உள்ள இடத்தில் பைக் சேஸிங் காட்சியை படமாக்க வினோத் வேற லெவல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்றும் இந்த படப்பிடிப்பு மட்டும் ஒரு வாரம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் ’ஏகே 61’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அஜித், மஞ்சுவாரியர், ஜான் கொகைன், அஜய், வீரா, உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். போனிகபூர் தயாரித்து வரும் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com