மாலையில் 'கோட்' சிங்கிள்'.. காலையில் அஜித் தயாரிப்பாளர் வெளியிட்ட சூப்பர் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று மாலை விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் அஜித் பட தயாரிப்பு நிறுவனம் லைகா அதிரடியாக ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித், விஜய் ஆகிய இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் திரையுலகை பொருத்தவரை இருவரும் போட்டியாளர்கள் தான் என்பதும் இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வதும் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக அஜித் படத்தின் அப்டேட் வரும் போது விஜய் படத்தின் அப்டேட்டும், விஜய் படத்தின் அப்டேட் வரும்போது அஜித் படத்தின் அப்டேட்டும், போட்டிக்கு வெளியாகி வருவது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று மாலை 6 மணிக்கு விஜய்யின் ‘கோட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் ஸ்பார்க் என்ற பாடல் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் ’விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு அஜித்தின் 32 ஆண்டு சினிமா வாழ்க்கைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
32 ஆண்டுகள் தீரா சாதனைகளும் ஆறா ரணமும்.. யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி’ என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த பதிவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Celebrating 32 years of Ajith Kumar! 🎉 A journey forged through trials, tribulations, and triumphs. 💪 His perseverance is the ultimate symbol of enduring success! 🔥#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/22WOotIpSZ
— Lyca Productions (@LycaProductions) August 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments