உங்களுக்கு பொழுதுபோக்கு எனக்கு தொழில்: ரசிகர்களுக்கு அறிவுரை கூறி அஜித் அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் எல்லைமீறி முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியிலும், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியிலும் ’வலிமை’ அப்டேட் கேட்டு வருவது படக்குழுவினர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் அஜீத் ரசிகர்களின் இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவுரை கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.
கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் "வலிமை" சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு எனிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புறேன் .
இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
— Suresh Chandra (@SureshChandraa) February 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments