உங்களுக்கு பொழுதுபோக்கு எனக்கு தொழில்: ரசிகர்களுக்கு அறிவுரை கூறி அஜித் அறிக்கை!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் எல்லைமீறி முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியிலும், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியிலும் ’வலிமை’ அப்டேட் கேட்டு வருவது படக்குழுவினர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் அஜீத் ரசிகர்களின் இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவுரை கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என்‌ மீதும்‌ என்‌ படங்களின்‌ மீதும்‌ அபரிதமான அன்புக்‌ கொண்டு இருக்கும்‌ எதையும்‌ எதிர்பாராத அன்பு செலுத்தும்‌ என்‌ உண்மையான ரகர்களுக்கும்‌, மக்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த வணக்கம்‌.

கடந்த சில நாட்களாக என்‌ ரசிகர்கள்‌ என்ற பெயரில்‌ நான்‌ நடித்து இருக்கும்‌ வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல்‌, விளையாட்டு மற்றும்‌ பல்வேறு இடங்களில்‌ சிலர்‌ செய்து வரும்‌ செயல்கள்‌ என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம்‌ குறித்த செய்‌திகள்‌ உரிய நேரத்தில்‌ வரும்‌. அதற்கான காலத்தை, நேரத்தை நான்‌ தயாரிப்பாளருடன்‌ ஒருங்‌கிணைந்து நிர்ணயம்‌ செய்வேன்‌. அதுவரை பொறுமையுடன்‌ காத்திருக்கவும்‌. உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு எனிமா ஒரு தொழில்‌. நான்‌ எடுக்கும்‌ முடிவுகள்‌ என்‌ தொழில்‌ மற்றும்‌, சமூக நலன்‌ சார்ந்தவை. நம்‌ செயல்களே சமூகத்தில்‌ நம்‌ மீது உள்ள மரியாதையை கூட்டும்‌.

இதை மனதில்‌ கொண்டு ரசிகர்கள்‌ பொது வெளியிலும்‌, சமூக வலைத்தளங்களிலும்‌ கண்ணியத்தையும்‌, கட்டுப்பாட்டையும்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்கிறேன்‌. என்‌ மேல்‌ உண்மையான அன்பு கொண்டவர்கள்‌ இதை உணர்ந்து செயல்படுவார்கள்‌ என நம்புறேன்‌ .

இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

சொந்த மண்ணில் சதம் மற்றும் 5 விக்கெட்டுக்கள்: அஸ்வினுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ஆம் தேதி 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பது தெரிந்ததே

'முரட்டு சிங்கிள்ஸ் டே' கொண்டாடிய பாலாஜி: ஷிவானிக்கு மட்டும் கேக் ஊட்டாதது ஏன்?

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடிய நிலையில் காதலன் அல்லது காதலி இல்லாதவர்கள் முரட்டு சிங்கிள்ஸ் டே' கொண்டாடி காதலர்களுக்கு வெறுப்பேற்றினர்.

ஒரு வழியாக 'வலிமை' அப்டேட் தந்த போனிகபூர்!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் இந்த படத்தின் உள்நாட்டு

அர்ச்சனா வெளியே, வனிதா உள்ளே: ஜீடிவியின் முக்கிய சீரியலில் வனிதா!

ஜீ டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த டிவியில் இருந்து வெளியேறினார்

காதலர் தினத்தில் கர்ப்பமான செய்தியை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!

காதலர் தினத்தில் திரைஉலக மற்றும் சின்ன திரையுலக நட்சத்திரங்கள் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்த நிலையில்