இதுமட்டும் வேண்டவே வேண்டாம்: அஜித்தின் முக்கிய அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,November 17 2022]

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என்றாலும் அவர் தனது ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய தகவல்களை தனது மேனேஜர் மூலம் கூறி வருகிறார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சற்றுமுன் அஜித் மேனேஜரின் டுவிட்டர் பக்கத்தில் அஜித் கூறியதாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: உங்களை சுற்றி பாசிட்டிவான நபர்களையும், உங்களை ஊக்கப்படுத்தும் நபர்களை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். நெகட்டிவிட்டி வேண்டவே வேண்டாம். பெரிய லட்சியங்களை அடைய முயலுங்கள்’ என அஜித் தெரிவித்துள்ளதாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கும் நிலையில் பல நெகட்டிவ் பதிவுகள் சமூக ஊடகங்களில் பதிவாகி வரும் நிலையில் அஜித்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படமான ’ஏகே 62’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஓடிடியில் 'காந்தாரா' ரிலீஸாகும் தேதி இதுவா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து  இயக்கிய 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 'விக்ரம் வேதா' இயக்குனர்களின் படைப்பு!

 விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படைப்பு அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் தமிழ்: கடைசியில இந்த வார எலிமினேஷன் இவர் தானா? 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் யாராக இருக்கும் என்ற தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் இணையும் 'விக்ரம்' கூட்டணி: இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது உலகம் முழுவதும் இந்த படம் ரூ.400 கோடிக்கு

நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை நேரில் பார்த்து வாழ்த்திய பிரபல நடிகை: வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைகளை நேரில் சந்தித்த பிரபல நடிகை ஒருவர் வாழ்த்துக்களை