சென்னையில் அஜித் வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்த அதிகாரிகள்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,October 23 2023]

சென்னையில் உள்ள அஜித் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணி மற்றும் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த பணிகள் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சாலையை ஒட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற உத்தரவுபடி நெடுஞ்சாலை துறையினர் இந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் நடிகர் அஜித்குமார் தற்போது வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் வீட்டில் முகப்பு வாயிலில் உள்ள கேட் மற்றும் காம்பவுண்ட் சுவ இடிக்கப்பட்டு அந்த பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.

அஜித்குமார் வீடு மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள நான்கு கிலோமீட்டர் வரை உள்ள வீடுகளின் காம்பவுண்ட் அவர்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அஜித் வீடு உட்பட 50க்கும் மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான வீடுகள் இடிக்கப்பட்டு மழை நீர் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.