விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு உதவி செய்த அஜித்.. கணவரின் நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Friday,April 14 2023]

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு நடிகர் அஜித் உதவி செய்தது குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

என்னுடைய மனைவி 10 மாத குழந்தையுடன் கிளாஸ்கோ என்ற நகரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அப்போது அவர் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் அஜித்குமாரை பார்த்தார். ஒரு கையில் சூட்கேஸ் மற்றும் இன்னொரு கையில் கைக்குழந்தையுடன் எனது மனைவி இருப்பதை பார்த்ததும் அஜித் உடனே அந்த பெட்டியை தான் வாங்கிக் கொண்டார்.

எனது மனைவி வேண்டாம் என்று சொல்லியபோது ’பரவாயில்லை இருக்கட்டும், எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், அந்த கஷ்டம் எனக்கு தெரியும் என்று அவர் கூறினார். இதனை அடுத்து அஜித் என் மனைவியின் சூட்கேஸை விமானம் வரை கொண்டு வந்து, அந்த சூட்கேஸ் எனது மனைவியின் இருக்கைக்கு அருகில் வைக்கப்படும் வரை இருந்து விட்டு அதன் பிறகு தான் சென்று உள்ளார்.

அஜித்தின் இந்த உதவி செய்யும் குணம் தான் அவர் இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என்று அந்த பெண்ணின் கணவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இது குறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

'பொன்னியின் செல்வன் 2':  ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி

குமரி-சென்னை 'விசில் போடு எக்ஸ்பிரஸ்'.. எல்லாமே இலவசம்: சிஎஸ்கே அறிவிப்பு..!

வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியை நேரில் பார்க்க 750 பேர்களை இலவசமாக சென்னை அழைத்து வர சிஎஸ்கே

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்.. டைட்டில் என்ன தெரியுமா?

நடிகர் சந்தானம் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

பிரதமர் மோடியை திடீரென சந்தித்த நடிகை ராதிகா.. என்ன காரணம்?

பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் நடிகை ராதிகா சரத்குமார் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

லோகேஷ் கனகராஜ், அனிருத் ஹீரோக்களாக நடிக்கிறார்களா? இது என்ன புது கதையா இருக்கு?

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ஒரு திரைப்படத்தில் ஹீரோ கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்க இருப்பதாகவும்