close
Choose your channels

கஜா புயல் நிவாரண நிதி: அஜித் கொடுத்த தொகை குறித்து தமிழக அரசு அறிவிப்பு

Sunday, November 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் கஜா புயலால் டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் அடியோடு பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களின் இயல்பு வாழக்கை திரும்ப தமிழகமெங்கிலும் இருந்து உதவிகள் குவிந்து வருகிறது. குறிப்பாக திரையுலகினர்களின் நிவாரண உதவி பாதிக்கபட்ட மக்களுக்கு பேருதவியாகவும் ஆறுதலாகவும் உள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு தல அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. இதுவரை கோலிவுட் திரையுலகில் இருந்து பல நடிகர்கள் செய்த நிவாரண உதவி உடனுக்குடன் செய்திகளாக வெளிவந்த நிலையில் அஜித் செய்த உதவி மட்டும், தமிழக அரசின் அறிவிப்பால் மட்டுமே வெளியே தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக அனுப்பியுள்ளார். அதேபோல் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ரூ.40 லட்சம் பணம் அனுப்பி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment