லட்சுமி மேனனுக்கு அஜித் கொடுத்த தீபாவளி போனஸ்?

  • IndiaGlitz, [Sunday,November 15 2015]

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான அஜீத்தின் 'வேதாளம்' வெற்றி நடை போட்டு வரும் நிலையில், இந்த படத்தில் அஜீத்துக்கு அடுத்தாற்போல் நடிப்பில் பாராட்டுக்களை பெற்றவர் லட்சுமி மேனன். அஜீத் தங்கையாக நடித்த இவருடைய நடிப்பை பல ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன.

இந்நிலையில் 'வேதாளம்' திரைப்படம் எதிர்பார்த்ததைவிட நல்ல வெற்றியை பெற்றுள்ளதால், லட்சுமிமேனனுக்கு பேசிய தொகையை விட கூடுதலாக சம்பளம் அளிக்கும்படி அஜீத், தயாரிப்பாளரை கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த கூடுதல் தொகை தீபாவளிக்கு அஜீத் தனக்கு கொடுத்த போனஸாகவே லட்சுமிமேனன் கருதுகிறாராம். இந்த படத்தில் மட்டுமின்றி, படப்பிடிப்பு முடிந்தபின்னர் அஜீத்-லட்சுமி மேனனின் அண்ணன் தங்கை பாசம் தொடர்வதாகவே கூறப்படுகிறது.

More News

உத்தம வில்லன்' படத்திற்கு 'லாஸ் ஏஞ்சல்ஸ்' விருது கிடைக்குமா?

Los Angeles Independent Film Festival Awards என்ற விழா ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட் மற்றும் பிறநாடுகளின் சிறந்த படங்களுக்கு விருது வழங்கும் விழாவாக நடைபெற்று வருகிறது...

கபாலி, விஜய் 59' படங்களின் ரிலீஸ் தேதி?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு தற்போது ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்....

3வது முறையாக இணையும் அஜித்-சிவா படத்தை தயாரிக்கும் நிறுவனம்

'சிறுத்தை' படத்தின் மூலம் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமான சிவா, தல அஜீத்துடன் இணைந்து 'வீரம்' மற்றும் 'வேதாளம்'...

அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார் அஜித்

அஜீத் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முழங்கால் மற்றும் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

'பிரேமம் ரீமேக்கில் 'வேதாளம்' நடிகை

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் செய்யப்படுவது குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை...