close
Choose your channels

2015-ல் அஜீத் படங்கள் செய்த சாதனை

Thursday, November 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2015ஆம் ஆண்டு ரிலீஸான படங்களில் ஒரே நாளில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் ஐந்து இடங்களில் அஜீத் படங்கள் மூன்று இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது.

இவ்வருடம் ரிலீஸான படங்களில் ஒரே நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இதில் வேதாளம் திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் ரூ.15.5 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

அஜீத்தின் இன்னொரு படமான என்னை அறிந்தால் ரூ.11 கோடி வசூல் செய்து 2வது இடத்தையும், ஷங்கரின் 'ஐ', ரூ.10.5 கோடி வசூல் செய்து 3வது இடத்தையும், விஜய்யின் 'புலி' ரூ.10 கோடி வசூல் செய்து 4வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்நிலையில் 'வேதாளம்' திரைப்படம் இரண்டாவது நாளில் ரூ.9.75 கோடி வசூல் செய்து இதே பட்டியலில் மீண்டும் 5வது இடத்தை பிடித்துள்ளது.

எனவே முதல் ஐந்து இடங்களில் அஜீத் படங்கள் மூன்று இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் 15.5 கோடி மற்றும் 2வது நாளில் 9.75 கோடி என இரண்டு நாட்களில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக 'வேதாளம்' வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment