தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித், விஜய் படங்களில் நடித்த நடிகை ஒருவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது
அஜித் நடித்த ’விஸ்வாசம்’, விஜய் நடித்த ’பைரவா’ ’சர்க்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் இந்த திருமணத்தில் அவருடைய நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
விஜய் நடித்த சர்க்கார் படத்தில் ஒரு சிறு கேரக்டரிலும், அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்தில் நயன்தாராவுக்கு தோழியாகவும் நடித்தவர் பாப்ரி கோஷ். அதுமட்டுமின்றி சந்தானம் நடித்த ’சக்க போடு போடு ராஜா’ என்ற படத்தில் நடித்துள்ள இவர் ’நாயகி’ ’பாண்டவர் இல்லம்’ போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்
இந்த நிலையில் தற்போது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ள பாப்ரி கோஷ், திருமணத்திற்குப் பின்னரும் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பதாக தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout