விஜய் அம்மாவுக்கு பிடித்த அஜித் படங்கள்
- IndiaGlitz, [Wednesday,April 06 2016]
இளையதளபதி விஜய்யின் தாயார் என்ற அடைமொழி மட்டுமின்றி சிறந்த திரைக்கதை ஆசிரியர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களில் திகழ்ந்தவர் ஷோபா சந்திரசேகர். சமீபத்தில் ஷோபா அளித்த பேட்டியில் விஜய் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்.
அஜித்துக்கு எப்போதுமே விஜய் போட்டியாளராக இருந்ததில்லை என்றும் அஜித்துக்கு குழந்தை பிறந்தபோது குடும்பத்துடன் சென்று பார்த்து வந்ததாக கூறிய ஷோபா, அஜித் நடித்த வாலி, ஆசை, காதல் கோட்டை ஆகிய படங்கள் தனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்றும் கூறினார்.
மேலும் விஜய்க்கு பொருத்தமான ஜோடி சிம்ரன் என்றும், இருவரும் இணைந்து நடித்த ஒன்ஸ்மோர், பிரியமானவளே ஆகிய படங்கள் தன்னை மிகவும் கவர்ந்த படங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய் நடித்த அனைத்து படங்களுமே தனக்கு பிடித்த படங்கள்தான் என்றாலும் பூவே உனக்காக, குஷி, துப்பாக்கி ஆகிய படங்கள் தன்னுடைய பேவரேட் படங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.