அஜித்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. திரையுலகினர் இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலை காலமானதை அடுத்து அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் என்பவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அஜித் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் இருக்கும் நிலையில் அவருடைய உறவினர்கள் நண்பர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அஜித் தந்தை சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது 84.
அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கேரளாவில் உள்ள பாலக்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு அஜித் குமார், அனுப் குமார் மற்றும் அனில் குமார் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர் என்றும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout