அஜித் மாமனார் இவ்வளவு அழகாக பாடுவாரா? வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,August 08 2023]

நடிகர் அஜித்தின் மாமனார் அதாவது ஷாலினி அஜித்தின் தந்தை ஒரு சிறந்த பாடகர் என்பதும் குறிப்பாக டிஎம் சௌந்தரராஜன் பாடிய பாடலை அவரை போலவே பாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஷாலினி அஜித்தின் தந்தை பாபு என்பவர் ஒரு சிறந்த பாடகர் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். இவர் ஒரு சில இசை நிகழ்ச்சிகளில் டிஎம் சௌந்தரராஜன் பாடிய பாடல்களை பாடியுள்ளார். அவருடைய குரல் அச்சு அசலாக டிஎம்எஸ் போலவே இருப்பதை அடுத்து இந்த பாடல்கள் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் எம்ஜிஆர் நடித்த ’ஆயிரத்தில் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ’ஓடும் மேகங்களே’ என்ற பாடலை ஷாலினி அஜித்தின் தந்தை பாபு பாடிய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலை கேட்ட ரசிகர்கள், அஜித்தின் மாமனார் இவ்வளவு அழகாக பாடுவாரா? என்று தங்களது ஆச்சரியத்தை கமெண்ட்ஸ் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.