லைகாவின் புதிய அறிவிப்பு.. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லைகா நிறுவனம் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவிப்பு ’அஜித் 62’ பட அறிவிப்பு இல்லை என்பதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
லைகா நிறுவனம் தனது 24 வது படத்தின் அறிவிப்பை இன்று வெளியிடுவதாக நேற்றே தெரிவித்திருந்ததால் இந்த அறிவிப்பு ’ஏகே 62’ படத்தின் அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அஜித்துக்கு உகந்த நாளான வியாழக்கிழமை இந்த அறிவிப்பு வருவதால் கண்டிப்பாக அஜித் படத்தின் அறிவிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் சற்று முன் வெளியான அந்த அறிவிப்பில் பாரதிராஜா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாக வரும் ’திருவின் குரல்’ என்ற அறிவிப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிஷ் பிரபு இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.
பாரதிராஜா மற்றும் அருள்நிதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் நாயகியாக ஆத்மிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Presenting the Title & 1st look poster of our Production#24 #ThiruvinKural 📢⚕️
— Lyca Productions (@LycaProductions) February 16, 2023
Starring the promising @arulnithitamil @offBharathiraja & @im_aathmika 🌟
Directed By @harishprabhu_ns 🎬
Music By @SamCSmusic 🎶
DOP @sintopoduthas 🎥
Editing @thecutsmaker ✂️🎞️
🤝 @gkmtamilkumaran pic.twitter.com/aTzr2cbDtD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com