பேனர் கலாச்சாரம்: அஜித் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி
Send us your feedback to audioarticles@vaarta.com
பேனர் கலாச்சாரம் என்றாலே அனைவரும் அரசியல்வாதிகளை மட்டுமே குறை சொல்லி கொண்டிருக்கின்றோம். அரசியல்வாதிகளுக்கு இணையாக மாஸ் நடிகர்களுக்கு அவர்களுடைய ரசிகர்கள் பேனர் மற்றும் கட் அவுட்டுக்கள் வைத்து கொண்டிருக்கின்றனர். அதுவும் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த கைக்காசை செலவு செய்து பேனர்கள், கட் அவுட்டுக்களை வைக்கின்றனர்.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ பேனரால் மரணம் அடைந்த நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என்று தங்கள் கட்சி தொண்டர்களுக்கு அறிக்கைகள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து பேனர் கலாச்சாரம் சினிமா ரசிகர்களிடமும் நீங்க வேண்டும் என நடிகர் விவேக் உள்பட பலர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் சுபஸ்ரீ உயிரிழப்பை அடுத்து மதுரை அஜித் ரசிகர்கள் ஒரு உறுதிமொழியை எடுத்துள்ளனர். அஜித் திரைப்படங்கள் மற்றும் அஜித் பிறந்த நாள் உள்பட எந்த நிகழ்வுகளுக்கும் இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என்பதுதான் அந்த உறுதி மொழி. அஜித் ரசிகர்கள் போலவே மற்ற மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று இதே மாதிரி உறுதிமொழி எடுத்தால் தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் ஒழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout