close
Choose your channels

அஜித் அறிக்கைக்கு போஸ்டர் அடித்து ரியாக்சன் செய்த ரசிகர்கள்!

Tuesday, February 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு பிரதமர் முதல் முதல்வர் வரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று அஜித் சற்று கண்டிப்புடன் கூடிய ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தகுந்த நேரத்தில் நானும் தயாரிப்பாளரும் சேர்ந்து அப்டேட்டை வெளியிடுவோம் என்றும் அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்கவும் என்றும் சமூக அக்கறையுடன் ரசிகர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருந்தார்.

இந்த அறிவுரையை அடுத்து அஜித் ரசிகர்கள் பலர் இனிமேல் யாரிடமும் அப்டேட் கேட்க மாட்டோம் என்று சமூக வலைதளங்கள் மூலம் உறுதி செய்தனர். இந்த நிலையில் போஸ்டருக்கு புகழ்பெற்ற மதுரை நகரில் உள்ள அஜித் ரசிகர்கள் இதனையே ஒரு போஸ்டராக அடித்து ஒட்டியுள்ளனர். ‘உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவோம் என்றும் உங்கள் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்றும் அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment