அஜித் அறிக்கைக்கு போஸ்டர் அடித்து ரியாக்சன் செய்த ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,February 16 2021]

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு பிரதமர் முதல் முதல்வர் வரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று அஜித் சற்று கண்டிப்புடன் கூடிய ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தகுந்த நேரத்தில் நானும் தயாரிப்பாளரும் சேர்ந்து அப்டேட்டை வெளியிடுவோம் என்றும் அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்கவும் என்றும் சமூக அக்கறையுடன் ரசிகர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருந்தார்.

இந்த அறிவுரையை அடுத்து அஜித் ரசிகர்கள் பலர் இனிமேல் யாரிடமும் அப்டேட் கேட்க மாட்டோம் என்று சமூக வலைதளங்கள் மூலம் உறுதி செய்தனர். இந்த நிலையில் போஸ்டருக்கு புகழ்பெற்ற மதுரை நகரில் உள்ள அஜித் ரசிகர்கள் இதனையே ஒரு போஸ்டராக அடித்து ஒட்டியுள்ளனர். ‘உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவோம் என்றும் உங்கள் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்றும் அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

அவர் மாறவேமாட்டார்… பாலிவுட் பிரபலத்தின் ஒற்றைப் பதிவால் குழம்பிய ரசிகர்கள்!

நடிகர் அர்ஜுன் நடித்த “முதல்வன்“ படத்தில் “ஷக்கல லக்க பேபி“ பாடலுக்கு நடித்து இளசுகளின் மனதை கொள்ளைக் கொண்டவர் நடிகை சுஷ்மிதா சென்.

'தோனி' படத்தில் சுஷாந்துடன் நடித்தவரும் தற்கொலை: அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது.

வாயை மூடு, போடி: ஓவியாவுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!

பிரதமர் மோடி சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்திருந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பலர்  #GoBackToModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தனர்

ஒரே ஒரு கேள்வி: அஜித், விஜய் ரசிகர்களின் மோதலுக்கு காரணமான 'மாஸ்டர்' நடிகை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் கேட்ட கேள்வி ஒன்றால் அஜித் விஜய் ரசிகர்கள்

நீச்சல் குளத்தில் தொலைக்காட்சி பிரபலம்: கணவரே எடுத்த புகைப்படம்!

தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ஒருவர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை தனது கணவரே எடுத்துள்ளதாக கூறியுள்ளார்