காணாமல் போய் 300 நாளாச்சு: கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு: அஜித் ரசிகர்கள் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,February 26 2024]

அஜித் நடித்த வரும் ’விடாமுயற்சி' படத்தின் அப்டேட் வெளியாகி 300 நாள் ஆகிவிட்டது என்றும் அப்டேட் வெளியிடாத லைக்கா நிறுவனத்தை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அஜித் ரசிகர்கள் திடீரென போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’விடாமுயற்சி'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு குறித்த தகவல்களோ அல்லது படத்தின் மற்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் ’விடாமுயற்சி' படத்தின் அறிவிப்பு வெளியாகி 300 நாள் ஆகிவிட்ட போதிலும் லைக்கா நிறுவனம் இந்த படம் குறித்த எந்த அப்டேட்டையும் தெரிவிக்கவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பலமுறை சமூக வலைதளங்கள் மூலம் ’விடாமுயற்சி' அப்டேட் கேட்டு சலித்து போன அஜித் ரசிகர்கள் தற்போது அதிரடியாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் லைக்கா நிறுவனத்தை காணவில்லை, ’விடாமுயற்சி' டைட்டில் வெளியிட்டு 300 நாள் ஆகிவிட்டது, படத்தோட அப்டேட் என்ன ஆச்சு, கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த போஸ்டர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.