57 கிலோ அஜித் இட்லி: ரசிகர்களின் புதுமையான கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Wednesday,August 23 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இன்று இரவு அஜித் ரசிகர்களுக்கு அனேகமாக சிவராத்திரியாகத்தான் இருக்கும். விடிய விடிய போஸ்டர் ஒட்டுவது, கட் அவுட் வைப்பது போன்ற பணிகள் இருக்கும் நிலையில் அதிகாலை காட்சியிலும் பிசியாக இருப்பார்கள்.

இந்த நிலையில் நாளை அஜித் படம் வெளியாவதை அடுத்து இன்று அஜித் ரசிகர்கள் வித்தியாசமாக இட்லி வடிவில் புதுமையான கொண்டாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வடசென்னையில் உள்ள வீர சென்னை தல அஜித் நண்பர்கள் கிளப் மற்றும் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து அஜித்தின் 57வது படமாக விவேகம் இருப்பதால் 57 கிலோ எடையில் அஜித் உருவ இட்லி செய்து வடசென்னை தங்கசாலை அருகில் உள்ள பாரத் திரையரங்க முகப்பில் பிரமாண்டமாக அரங்கு அமைத்து அங்கு இன்று மாலை 5 மணிக்கு அஜித் உருவ இட்லியை வைத்து கொண்டாடவுள்ளனர்.

உலக வரலாற்றில் ஒரு நடிகருக்கு இட்லியில் உருவம் வடித்து கொண்டாடுவது இதுவே முதல் முறை என்று அஜித் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.