கடலுக்கு அடியில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் ரசிகர்கள் அவ்வப்போது வித்தியாசமாக ஏதாவது செய்து வருவார்கள் என்பதும் அது குறித்த வீடியோ, புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.
அந்தவகையில் அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் புதுவையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமாக அஜித்தின் 30 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாட முடிவு செய்த நிலையில் கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடியது ரசிகர்கள் மத்தியில் அதிர வைத்துள்ளது.
கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் மூலம் சுமார் 100 அடி ஆழத்திற்கு சென்று அஜித்தின் பேனர்களை வைத்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் எப்போதுமே வேற லெவல் தான் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
இந்தநிலையில் அஜித்தின் ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த படம் வரும் தீபாவளி அல்லது கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவா இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.
Welcoming #AjithKumar sir #30YearsOfAJITHISM in a grand manner??
— French City AJITH Fans - PUDUCHERRY (@AjithFCPudhuvai) August 5, 2022
100ft below under the sea water ??
NOTE:Do not try this ⚠️
Risky stunt ❌
Only the special trained person is permissible under the sea ??@TrendsAjith@TFC_mass @Thalafansml @Dharsha_AK @ItsMeKillerXD @its__vignesh pic.twitter.com/LenulfkskG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments