ஆன்லைன் வகுப்புகள்: தல அஜித் ரசிகர்கள் செய்த உதவி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதுவரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளை மாணவர்கள் தொலைக்காட்சி அல்லது மொபைல் போனில் பார்த்து பாடங்களை படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில ஏழை மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சியும் இல்லாமல் ஸ்மார்ட் போனும் இல்லாமல் இருப்பதால் அவர்களால் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடிவதில்லை.

இதனை கணக்கில் கொண்டு கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் அஜித் ரசிகர்கள் தொலைக்காட்சி இல்லாத ஏழை மாணவர்களுக்கு புதிய தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கி இலவசமாக வழங்கி வருகின்றனர்., இந்த உதவியால் ஏழை மாணவர்கள் தொலைக்காட்சியில் ஆன்லைன் வகுப்புகளை கண்டு படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கேரள மாநிலம் கண்ணூர் அஜித் ரசிகர்கள் செய்த இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி 

தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை என தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காறி துப்பிடுவேன்: வனிதா விவகாரத்தில் கோபப்பட்ட ராபர்ட்

நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்தத் திருமணம் பீட்டர்பால் முதல் மனைவியால் சர்ச்சைக்குள்ளாகி இது குறித்த செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளிவந்தது.

ஹேப்பி பர்த்டே ஹஸ்பண்ட்: சாக்சி தோனியின் க்யூட் பதிவு

கிரிக்கெட்டின் தல என்று அன்புடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி அவர்களின் 39 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விஷால் மேனேஜரின் கார் கண்ணாடி உடைப்பு: பெரும் பரபரப்பு

நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ரம்யா என்ற பெண் கணக்காளர் 45 லட்சம் ரூபாய் வரை

சன் டிவியுடன் கனெக்சன் ஆனது விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு