close
Choose your channels

'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்தால் உங்களுக்கு தான் ஓட்டு.. டிரம்ப் இடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை..!

Saturday, October 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'விடாமுயற்சி’ அப்டேட் கொடுத்தால் உங்களுக்கு தான் எங்களது ஓட்டு என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் சமூக வலைதளத்தில் கமெண்ட்களாக மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பக்கம் விஜய் நடிக்க உள்ள ’தளபதி 69’ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ’விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் பல மாதங்களாக வெளிவரவில்லை என்று அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் தேர்தல் வாக்குமூல அறிக்கையை பதிவு செய்திருந்தார். அந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் ’எங்களுக்கு நீங்கள் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் கொடுத்தால் நாங்களும் எங்கள் மதுரையை சேர்ந்த நண்பர்களும் உங்களுக்கு வாக்களிப்போம் என கமெண்ட் பதிவு செய்துள்ளனர். இந்த கமெண்ட் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக இருந்த போது அவரிடம் அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் அப்டேட்களை கேட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment