அந்த பத்து பேர்களில் அஜித் ரசிகர்கள் சிக்குவார்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் காரசாரமாக மோதிக்கொண்டு வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச பதிவு செய்பவர்கள் குறித்து இன்று சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி ஆபாச கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட், ஆபாச கருத்துக்களை பதிவிட்ட 10 பேரின் பெயர் பட்டியலை இன்றே தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே சைபர் க்ரைம் போலீசார் தேர்வு செய்யும் அந்த பத்து பேரில் அஜித் ரசிகர்கள் யாராவது சிக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் கஸ்தூரியை மீண்டும் வம்புக்கு இழுத்த அஜித் ரசிகர் ஒருவர் அஜித் ரசிகர் என்ற போர்வையில் போலி ஐடி கொண்ட ஒருவர் செய்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் அனைவரையும் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு வம்புக்கு இழுத்தால் சரியாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கைக்க்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, ‘‘போடா டேய், இப்ப உன்னைத்தான் சொல்றேன்’ என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
poda dei. ippo unaththathaan solren. #dirtyajithfan
— Kasturi Shankar (@KasthuriShankar) January 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments