ஷிவாங்கியிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகர்: என்ன பதில் சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக அஜித் ரசிகர்கள் படக்குழுவினர்களிடம் கேட்டுக் கொண்டிருந்த போதிலும் அப்டேட் எப்போது வரும் என்ற தகவல் கூட வெளிவரவில்லை.

இந்த நிலையில் ‘வலிமை’ அப்டேட்டை அஜித் ரசிகர்கள் முதல்வர், பிரதமர், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரிடம் கேட்டு செய்த தொந்தரவின் காரணமாக ரசிகர்களை கண்டிக்கும் வகையில் அஜித் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இருப்பினும் அஜித் ரசிகர்கள் இன்னும் ‘வலிமை’ அப்டேட்டை யாரிடம் கேட்பது என்பது கூட தெரியாமல் கிட்டத்தட்ட பார்க்கும் அனைவரிடமும் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அந்த நிகழ்ச்சியில் ஒரு அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் கூறுங்கள் என்று கேட்க, ஷிவாங்கி ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் சமாளித்து கொண்ட ஷிவாங்கி தன்னுடைய ஸ்டைலில், ‘எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க, ஒரு வேலை கிடைத்தால் நான் சொல்கிறேன்’ என்று சிரித்துக்கொண்டே பதில் கூறினார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.