சென்னை சேப்பாக்கத்தில் 'வலிமை' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்! வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு மட்டும் முடிந்து விட்டால் படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் கடந்த ஒரு வருடமாகவே ‘வலிமை’ படத்தின் எந்தவித அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டு வரும் அஜித் ரசிகர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் ‘வலிமை’ அப்டேட்டை கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண வந்திருந்த அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் வேண்டும் என்ற போஸ்டரை கையில் பிடித்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் வேண்டும் என்று போராட்டத்தை ஆரம்பிக்கும் முன் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Today match la Namba pullainga #INDvsENG_2021 @thisisysr@BoneyKapoor #Chepauk #Valimai#ThalaAjith #ValimaiWrapOnFeb15 #ValimaiIntroSong pic.twitter.com/elhGmpRjYT
— Surya (@Surya75567388) February 13, 2021
டேய் மோயின் அலிய கூட விட்டு வக்கலயாடா????#ValimaiUpdate #Valimai pic.twitter.com/Alj1jLT8ip
— シ︎Mʀ.அஜித்தியன் சூர்யா™☠️?? (@Itz_Suriya18) February 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com