ஒரு ஆர்வத்துல செஞ்சிட்டேன், மன்னிச்சுடுங்க..  'கில்லி' பேனரை கிழித்த அஜித் ரசிகரின் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,May 02 2024]

நேற்று சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ‘கில்லி’ படத்தின் பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் ரீரிலீஸ் செய்யப்பட்டது என்பதும் இந்த படம் புதிய திரைப்படங்களுக்கு இணையாக ஓப்பனிங் வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இரண்டு வாரங்கள் ஆகிய போதிலும் ‘கில்லி’ திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் ‘கில்லி’ படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை அஜித் ரசிகர் ஒருவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பேனரை கிழித்த அஜித் ரசிகர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’நான் பசங்களோட தியேட்டருக்கு ’தீனா’ படம் பார்க்க சென்றபோது அருகில் ‘கில்லி’ பேனர் இருந்தது. ஒரு ஆர்வத்தில் பசங்களுடன் சேர்ந்து ஒரு என்ஜாய்மென்ட் பண்ணுவதற்காக கையில் வைத்திருந்த பைக் சாவியை வைத்து ‘கில்லி’ படத்தின் பேனரை கிழித்து விட்டேன்.

இதனால் விஜய் ரசிகர்களுக்கும் தமிழக வெற்றிக் கழக நண்பர்களுக்கும் எனது மன்னிப்பை நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதுபோன்ற சம்பவத்தில் நான் ஈடுபட மாட்டேன் என்றும் தலை வணங்கி மன்னிப்பு கூறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

More News

சூர்யா எல்லாவற்றிலும் 200% தான்.. 'கங்குவா' குறித்து ஜோதிகா கூறிய தகவல்..!

சூர்யா நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஜோதிகா, 'கங்குவா'

அஜித் இல்லாமல் ஆரம்பமாகிறதா 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு? ஆதிக் திட்டம் என்ன?

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மே 10ஆம் தேதி முதல் அவர் நடிக்கும் அடுத்த படமான 'குட் பேட் அக்லி'

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.. கணவரின் முக்கிய வேண்டுகோள்..!

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானதை அடுத்து அவரது கணவர் வேண்டுகோள் விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீரிலீஸிலும் அஜித் , விஜய் ரசிகர்கள் மோதலா? சென்னையின் முக்கிய திரையரங்கில் பரபரப்பு..!

அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்படும் என்பதும் அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி தங்களுக்கு விருப்பமான நடிகரின் பெயர்களை கோஷம் போடும் போது

மனைவி பரிசாக கொடுத்த பைக்கில் மாஸ் காட்டும் அஜித்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய மனைவி டுகாட்டி பைக் ஒன்றை பரிசாக கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.