அஜித் குடும்பத்தை உலுக்கிவிட்ட ஸ்ரீதேவி மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட்டில் மட்டுமின்றி அகில இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகை உலுக்கிவிட்டது. ஸ்ரீதேவியின் மறைவிற்கு கமல், ரஜினி மட்டுமின்றி இன்னொரு ஸ்டார் குடும்பத்தையும் உலுக்கிவிட்டதாம். அதுதான் தல அஜித் குடும்பம்
'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்ததில் இருந்தே ஸ்ரீதேவி குடும்பமும் அஜித் குடும்பமும் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அஜித் குடும்பத்தினர் வாரம் ஒருமுறை ஸ்ரீதேவியுடன் போனில் பேசும் அளவுக்கு இரண்டு குடும்பங்களும் நெருக்கமாகியிருந்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மரணச்செய்தி கமல், ரஜினி மட்டுமின்றி அஜித் குடும்பத்தினர்களையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நேற்றே ஷாலினி அஜித் மும்பைக்கு சென்றுள்ளதாகவும், இறுதிச்சடங்கும் முடியும் வரை அவர் மும்பையில் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout