துபாயில் சொகுசு படகில் அஜித் குடும்பம்.. தல என ரசிகர்கள் கோஷம்.. வைரல் வீடியோ..!
- IndiaGlitz, [Wednesday,January 03 2024]
துபாயில் சொகுசு படகில் அஜித் தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த படகில் இருந்து ரசிகர்கள் ’தல’ என்று கோஷமிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பிற்கு இடைவெளி விடப்பட்டது. இதனை அடுத்து அஜித் அஜர்பைஜான் நாட்டில் இருந்து துபாய் சென்றுள்ளதாகவும் துபாயில் குடும்பத்துடன் அவர் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகின.
இந்த நிலையில் துபாயில் புத்தாண்டு கொண்டாடிய அஜீத் தனது குடும்பத்துடன் சொகுசு படகில் சென்ற போது அருகில் இருந்த படகில் உள்ளவர்கள் அஜித்தை அடையாளம் கண்டு அவரை வீடியோ எடுத்தனர். மேலும் அஜித்தை நோக்கி அவர்கள் தல என்று கோஷமிட அஜித் கைகளை உயர்த்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஒரே மாதத்தில் இந்த படத்தின் முழுமையான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை அடுத்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
#Ajithkumar spending time with his family at Dubai💫
— AmuthaBharathi (@CinemaWithAB) January 2, 2024
The way he waved hands when fans started calling him THALA🤩♥️#VidaaMuyarchi pic.twitter.com/YPVjCRA5c0