துபாயில் சொகுசு படகில் அஜித் குடும்பம்.. தல என ரசிகர்கள் கோஷம்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,January 03 2024]

துபாயில் சொகுசு படகில் அஜித் தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த படகில் இருந்து ரசிகர்கள் ’தல’ என்று கோஷமிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பிற்கு இடைவெளி விடப்பட்டது. இதனை அடுத்து அஜித் அஜர்பைஜான் நாட்டில் இருந்து துபாய் சென்றுள்ளதாகவும் துபாயில் குடும்பத்துடன் அவர் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

இந்த நிலையில் துபாயில் புத்தாண்டு கொண்டாடிய அஜீத் தனது குடும்பத்துடன் சொகுசு படகில் சென்ற போது அருகில் இருந்த படகில் உள்ளவர்கள் அஜித்தை அடையாளம் கண்டு அவரை வீடியோ எடுத்தனர். மேலும் அஜித்தை நோக்கி அவர்கள் தல என்று கோஷமிட அஜித் கைகளை உயர்த்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஒரே மாதத்தில் இந்த படத்தின் முழுமையான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

நான் செய்த தவறுகளை திருத்தி கொள்கிறேன்: ரவீனாவின் முதல் பதிவில் கூறியது என்ன?

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நான் செய்த தவறுகளை திருத்தி கொள்கிறேன் என பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரவீனா எலிமினேஷனுக்கு பின் தனது முதல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் அப்பாவாக நடிக்கிறாரா சீமான்? தந்தை - மகள் போராட்டம் தான் கதையா?

 நடிகை நயன்தாராவின் அடுத்த படத்தில் சீமான் அவருடைய தந்தையாக நடிக்க இருப்பதாகவும் தந்தை மகள் குறித்த போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

'லேபிள்' கொடுத்த வெற்றி.. அருண்ராஜா காமராஜ் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகையா?

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சமீபத்தில் முடிவடைந்த 'லேபிள்' என்ற வெப் தொடர் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக கடைசி எபிசோடில்  இதுவரை எழுப்பப்பட்ட அனைத்து

திடீரென குறைந்த பணப்பெட்டியின் மதிப்பு.. பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட்.. போட்டியாளர்கள் அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 94 வது நாளாக இன்று நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதால் விறுவிறுப்பு அதிகமாகி உள்ளது  

எனக்கு 8,822 வயசு.. ராம் இயக்கிய 'ஏழு கடல் ஏழு மலை' கிளிம்ப்ஸ் வீடியோ..!

'ஒருத்தரை விட்டுட்டு ஒருத்தர் போறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும், ஆனால் ஒருத்தர் கூட ஒருத்தர் போறதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கும், அது  காதல்'  என்ற வசனத்துடன் தொடங்கும்