சிஎஸ்கே போட்டியை முதல்வர் குடும்பத்துடன் பார்த்து ரசித்த அஜித் குடும்பம்.. 'குட்டித்தல'யின் க்யூட் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,April 22 2023]

நேற்றைய சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த போட்டியை பார்ப்பதற்காக பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வருகை தந்திருந்தனர் என்பதும் போட்டி நடக்கும் போது நேரடி ஒளிபரப்பின் போது அவர்களது காட்சிகள் தொலைக்காட்சியில் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



அந்த வகையில் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித், தனது மகன் ஆத்விக், மகள் அனோஷ்காவுடன் இந்த போட்டியை பார்க்க மைதானத்துக்கு வந்திருந்தார். மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது குடும்பத்தினர்களுடன் இந்த போட்டியை பார்க்க வருகை தந்திருந்த நிலையில் முதலமைச்சர் குடும்பத்தின் அருகில் தான் அஜித் குடும்பத்தினர் உட்கார்ந்து இந்த போட்டியை பார்த்து ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

குறிப்பாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது குட்டி தல ஆத்விக்கை கேமிராமேன் அடிக்கடி கவர் செய்ய அதை தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டபோது அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்களை அவர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போட்டியை தனுஷ், பிரியங்கா மோகன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கமெண்ட்ரி அறையில் வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா வருகை தந்து கிரிக்கெட் குறித்து, தங்களது ’கஸ்டடி’ படம் குறித்து பேசியது சுவாரஸ்யமாக இருந்தது.