ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பில் அஜித் குடும்பத்தினர்! வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகள் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இயக்குனர் மணிரத்தினம் உள்பட பல பிரமுகர்கள் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக என்பதும், தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் தனது நன்றியை என சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு செய்திருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண நிகழ்ச்சியில் அஜித் குடும்பத்தினர் கலந்து கொண்ட தகவல் தற்போது புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது. அஜித் மனைவி ஷாலினி, ஷாலினியின் தங்கை ஷாம்லி, அஜித்தின் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆதிக் ஆகியோர்ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments