தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்ற போது அஜித் கண்ணீர் விட்டாரா? என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்த போது நடிகர் அஜித் காலை 7 மணிக்கு சென்று வாக்களித்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அஜித் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற போது கண் கலங்கியதாகவும் ஒரு கட்டத்தில் அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வந்ததாகவும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ள நிலையில் இது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது அஜித் தனது தந்தையுடன் வந்து வாக்களித்தார். ஆனால் கடந்த 2023 ஆம் தேதி அஜித்தின் தந்தை உடல் நல கோளாறு காரணமாக காலமான நிலையில் தற்போது அவர் தனியாக வந்து வாக்களிப்பதை நினைத்து கண்கலங்கி இருப்பார் என்றும் அதனால் தான் அவரது கண் கலங்கி இருக்கலாம் என்றும் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். வாக்களிக்க வரிசையில் நிற்கும் போது அஜித் கண்கலங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Poona election appavoda vanthom Intha thadava thaniya vanthurukom...🥺😢#AjithKumar pic.twitter.com/h4ucOhKSWy
— Valimai Pandees 𓃵 (@valimaipandees) April 25, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments