கேன்சர் சிறுமிக்கு ரூ.25 லட்சம் கொடுத்து உதவிய அஜித்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜீத் ஒரு நல்ல நடிகராக மட்டுமின்றி பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர் என்பதை நாம் பல சம்பவங்களின் மூலம் அறிந்திருக்கின்றோம். அந்த வகையில் தற்போது நேற்று இரவு முதல் சமூகவலைத்தளம் ஒன்றில் அஜித் உதவி செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தந்தையை அஜீத் அழைத்து, சிகிச்சைக்கு தேவையான ரூ.25 லட்சம் கொடுத்து உதவியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. . இந்த சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாகவும், உதவி செய்ததை விளம்பரம் செய்து புகழ் பெறும் வழக்கம் அஜித்துக்கு இல்லாததால், இதுவரை இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருந்திருக்கிறது. .
அஜித்திடம் உதவி பெற்ற அந்த சிறுமியின் தந்தை 'அஜித் தனது மகளின் சிகிச்சைக்கு ரூ.25 லடசம் கொடுத்து உதவியதாகவும், அந்த நேரத்தில் தான் மிகவும் வறுமையில் இருந்ததாகவும், ஆனால் இப்போது அஜித் முன்வந்தால் தன்னுடைய சொத்து முழுவதையும் அஜித்துக்கு கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியதை அடுத்தே, அஜித் செய்த உதவி தற்போது வெளியே தெரிந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com