'தல 61' திரைப்படம் மீண்டும் ரீமேக்கா?

  • IndiaGlitz, [Tuesday,September 03 2019]

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 'பிங்க்' படத்தின் ரீமேக் என்பதும் அந்தப் படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 'நேர்கொண்டபார்வை' பட இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் தல அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'தல 61 படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. சமீபத்தில் தேசிய விருது பெற்ற பாலிவுட் திரைப்படமான ஆர்ட்டிக்கிள் 15' என்ற படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் உரிமை போனிகபூரிடம் இருந்தாலும் தமிழில் வேறு ஒரு தயாரிப்பாளர் இந்த படத்தின் உரிமையை பெற்று தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

'ஆர்ட்டிக்கிள் 15' திரைப்படம் அஜீத்தின் இமேஜுக்கு ஏற்றவாறு வித்தியாசமான கதையம்சத்துடன் இருப்பதால் தனக்கு இந்த படத்தின் கதை பொருத்தமாக இருக்கும் என்று அவரே விரும்பி இந்த படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.