ஜெர்மனியில் அஜித் முக்கிய ஆலோசனை: வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,November 28 2018]

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் ஒருபக்கம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் எச்.வினோத் விறுவிறுப்பாக பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தனது அடுத்த புரோஜக்ட்டிற்காக அஜித் ஜெர்மனியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அஜித் ஆலோசகராக இருந்து வரும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தக்‌ஷா குழு சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டி ஒன்றில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தை பெற்று நாட்டிற்கே பெருமை சேர்த்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தக்சா குழுவினர் அடுத்த புரோஜக்டிற்காக ஜெர்மனியில் உள்ள வாரியோ என்ற ஹெலிகாப்டர் நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் அஜித் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. சினிமா செல்வாக்கின் மூலம் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் நடிகர்களின் மத்தியில் இந்தியாவின் விஞ்ஞான் வளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அஜித்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

More News

'தளபதி 63' படத்தின் கனவு நாயகியின் பரபரப்பான கருத்து

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் நாயகியாக 'கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

உலகக்கோப்பை ஹாக்கி தொடக்க விழாவில் அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி இன்று முதல் தொடங்குகிறது. ஏ,பி,சி,டி என 4 பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்ளவுள்ளன. இந்திய ஹாக்கி அணி சி பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மன்னிப்பு கேட்க சொல்வதுதான் ஜனநாயகமா? 'சர்கார்' விவகாரம் குறித்து கமல்

தளபதி விஜய் நடித்த 'சர்கார் திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததை அடுத்து அந்த படத்தின் இயக்குனர்

2.0 படம் குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்தியாவின் பிரமாண்டமான

'2.0' ரசிகர் மன்ற காட்சி கிடையாது: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வரும் 29ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.