அஜித் மகளை வீடியோ எடுத்த மர்ம நபர்.. குவியும் கண்டனங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் மகள் தனது தோழியுடன் தனி அறையில் இருக்கும் போது மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் அந்த நபருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா தனி அறையில் தன்னுடைய தோழியுடன் உடைகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஏதோ சொல்ல அஜித்தின் மகளும் அவருடைய தோழியும் வெளியே செல்கின்றனர்.
இதை அந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய நிலையில் இந்த வீடியோவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஒரு முன்னணி நடிகரின் மகளை அவருக்கு தெரியாமல், அவருடைய சம்மதம் இல்லாமல் வீடியோ எடுக்க கூடாது என்றும் இது சட்டப்படி தவறு என்றும் அந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் தான் இதுபோன்று அனுமதி இல்லாமல் வீடியோ எடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் கமெண்ட்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
முதலில் ட்விட்டரில் பதிவான இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் இது போன்ற வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பிரபலங்கள் மட்டுமின்றி பிரபலங்களின் வாரிசுகளுக்கும் இந்த பிரச்சனை இருப்பதை அடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Who captured this ?? pic.twitter.com/TJosFElsHy
— Rσɯԃყ Rσƈƙҽɾ (@Its_Rocker_) June 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments