பல்கேரியாவில் இருந்து அஜித் சென்னை வந்தது எப்படி? வெளிவராத தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவை கேள்விப்பட்டவுடன் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த அஜித், உடனே அங்கிருந்தே ஒரு இரங்கல் அறிக்கையை வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதோடு மட்டும் இல்லாமல் யாரும் எதிர்பாராத வகையில் பல்கேரியாவில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக மெரினா கடற்கரையில் மீளாத்தூக்கத்தில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு தனது அஞ்சலியை அவர் செலுத்தினார்.
சுமார் 6000 கிமீக்கும் அதிகமாக உள்ள பல்கேரியாவில் இருந்து அஜித் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும் அஜித் சென்னைக்கு கிளம்ப முடிவெடுத்தபோது அங்கிருந்து நேரடியாக சென்னைக்கு விமானம் இல்லாததால், பல்கேரியாவில் இருந்து ரொமானியா வந்து அங்கிருந்து வேறு ஒரு விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா மற்றும் சோ ஆகியோர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள அஜித், இன்று மீண்டும் பல்கேரியாவுக்கு புறப்பட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments